< Back
தேசிய செய்திகள்
மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றி - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
தேசிய செய்திகள்

மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றி - இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்

தினத்தந்தி
|
27 April 2024 12:50 AM IST

மகேந்திரகிரியில் பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்குரிய பி.எஸ்.4 எஞ்சின் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-


"மகேந்திரகிரியில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் இறுதிக்கட்ட பி.எஸ்.4 எஞ்சின் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சோதனை முடிவுகள் துல்லியமாக கிடைத்துள்ளன. எஞ்சின் பாகங்கள் உறுதியாக இருக்கின்றன. ராக்கெட்டின் எடையை குறைக்கும் வகையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன."


இவ்வாறு சோம்நாத் தெரிவித்தார்.



மேலும் செய்திகள்