< Back
தேசிய செய்திகள்
அரியானாவில் பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு அரசு ஊழியர்கள் போராட்டம்: போலீசார் தடியடி
தேசிய செய்திகள்

அரியானாவில் பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு அரசு ஊழியர்கள் போராட்டம்: போலீசார் தடியடி

தினத்தந்தி
|
20 Feb 2023 12:54 AM IST

அரியானாவில் பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சண்டிகார்,

அரியானா அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருமாறு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக பஞ்ச்குலா-சண்டிகார் எல்லையில் குழுமிய அவர்கள், பின்னர் அங்கிருந்து முதல்-மந்திரி வீட்டை முற்றுகையிடுவதற்காக பேரணியாக செல்ல முயன்றனர்.

உடனே போலீசார் அவர்களை தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கலைக்க முயன்றனர். இதில் சில ஊழியர்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு ஊழியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கம்பு மற்றும் தோட்டாக்களுடன் மாநில அரசை இயக்க பா.ஜனதா கூட்டணி அரசு விரும்புவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அதேநேரம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் எனவும் வாக்குறுதி அளித்து உள்ளது.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாநில அரசு அழைப்பு விடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்