புதிதாக திறக்கப்பட்ட பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக போராட்டம்
|முழு திட்டமும் முடியும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராமநகரா,
பெங்களூரு-மைசூரு விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த இரண்டு நாட்களுக்குள், சரியான சர்வீஸ் சாலைகள் இல்லாமல் கட்டணம் வசூலிப்பதாக சுங்கச்சாவடி அருகில் பல அமைப்புகள் போராட்டம் நடத்தின.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முழு திட்டமும் முடியும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படவில்லை என்றும், சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், அவர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
முதல் நாள் சுங்கக் கட்டணம் வசூலின் போது, சில தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்பட்டதால், நெரிசல் காரணமாக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
தினசரி பயணத்தை மேற்கொள்ளும் ஓட்டுநர்கள், குறுகிய தூரங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்காக வேதனை தெரிவித்தனர்.