< Back
தேசிய செய்திகள்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்
தேசிய செய்திகள்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்

தினத்தந்தி
|
10 Jan 2023 12:15 AM IST

கொப்பா டவுன் பகுதியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு டவுன் கொப்பா பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சிருங்கேரி சர்க்கிள் முதல் தாலுகா பஞ்சாயத்து அலுவலகம் வரை ஊர்வலமாக நடந்து சென்று அங்கு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது சிருங்கேரி தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ராஜே கவுடா பேசுகையில், கர்நாடகத்தில் உள்ள காபி தோட்ட உற்பத்தியாளர்களுக்கு பா.ஜனதா அரசு எந்த உதவியும் செய்யவில்லை.

அவர்களுக்கு முன்னேற்ற பாதையை அரசு காண்பிக்க தவறிவிட்டது. மாறாக அவர்களின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. மத்திய பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர்களுக்கு வேலை தருவதாக உறுதியளித்தது. ஆனால் அதை வெறும் வாய்வார்த்தையாக மட்டுமே வைத்துள்ளது. ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்டங்களையும் அரசு செயல்படுத்தாமல் கமிஷன் பெருவதில் குறியாக இருந்து வருகிறது. மேலும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் சாலை போக்குவரத்திற்கு சுங்க வரி அதிகரிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும் செய்திகள்