< Back
தேசிய செய்திகள்
சாலையில் அமர்ந்து வாலிபர் போராட்டம்
தேசிய செய்திகள்

சாலையில் அமர்ந்து வாலிபர் போராட்டம்

தினத்தந்தி
|
12 Nov 2022 2:40 AM IST

சாலை பள்ளங்களை சீரமைக்க கோரி பெங்களூருவில் சாலையில் அமர்ந்து வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அல்சூர்:

பெங்களூருவில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கடந்த சில மாதங்களாக விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் முக்கிய பகுதிகளில் சாலை பள்ளங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஸ்கூட்டரில் சென்ற வாலிபர் சாலை பள்ளத்தால் தவறி விழுந்த சம்பவம் அல்சூர் பகுதியில் நடந்துள்ளது. அதாவது பெங்களூரு அல்சூர் பகுதியில் வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவர் சாலை பள்ளத்தில் வாகனத்தை இறக்காமல் இருக்க முயன்றுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டரில் இருந்து அவர் தவறி விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர் சாலையில் அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தினார். அப்போது அவர், அனைவரும் கவனமாக சாலையில் செல்ல வேண்டும். சாலை பள்ளத்தால் உயிரிழப்பு ஏற்பட்ட பின்பு அவற்றை மூட வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர். சாலை பள்ளத்திற்கு காரணமான பா.ஜனதா எம்.எல்.ஏ. ரகுவுக்கு நன்றி என கூறி போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்