< Back
தேசிய செய்திகள்
கோலார் தங்கவயலில் வருகிற 2-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம்
தேசிய செய்திகள்

கோலார் தங்கவயலில் வருகிற 2-ந் தேதி முழுஅடைப்பு போராட்டம்

தினத்தந்தி
|
30 Aug 2022 9:02 PM GMT

அம்பேத்கர் சிலையை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து கோலார் தங்கவயலில் வருகிற 2-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோலார் தங்கவயல்:

அம்பேத்கர் சிலையை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து கோலார் தங்கவயலில் வருகிற 2-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முழு அடைப்பு

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை அம்பேதகர் பூங்காவில் கர்நாடக மாநில சமூக நலத்துறை சார்பில் சமுதாய பவன் கட்டப்பட்டது. இது சட்டத்திற்கு புறம்பானது என்று கூறி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதில் அம்பேத்கர் பூங்காவில் உள்ள அம்பேத்கர் பவனை இடிக்கவேண்டும், அம்பேத்கர் சிலை, முன்னாள் எம்.எல்.ஏ. சி.எம்.ஆறுமுகம் சிலை மற்றும் நினைவிடத்தை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

ஐகோர்ட்டின் உத்தரவு தங்கவயல் நகரில் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு காரணமானவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செப்டம்பர் 2-ந் தேதி கோலார் தஙகயவலில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவு

இந்த நிலையில் நேற்று முழுஅடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க கோரி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள், ஆட்டோ சங்கம், அரசு மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள், வியாபாரிகள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி உரிமையாளர்கள், திரையரங்குகளின் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் முழு ஆதரவு அளிக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்