< Back
தேசிய செய்திகள்
புதுச்சேரி கடற்கரைகளில் தடையை மீறி குளித்தால் அபராதம் விதிக்க பரிந்துரை
தேசிய செய்திகள்

புதுச்சேரி கடற்கரைகளில் தடையை மீறி குளித்தால் அபராதம் விதிக்க பரிந்துரை

தினத்தந்தி
|
24 Jan 2024 10:30 AM IST

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி அதிக அளவில் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நகரமாக புதுச்சேரி உள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் பொழுது போக்கிற்கான இடங்களுள் கடற்கரை முக்கியமானது. இங்குள்ள கடற்கரை பகுதிகளில் 6 கடற்கரை பகுதிகள் மிகவும் பிரசித்தமானது. ஆரோவில் கடற்கரை, புரோமினேட் கடற்கரை, பாரடைஸ் கடற்கரை, செரினிடி கடற்கரை, மாஹே கடற்கரை மற்றும் காரைக்கால் கடற்கரை.

கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள சாலையில் ரசித்தபடி நடந்து செல்வது அழகான சுகம்தரும். மாலை நேரங்களில் காந்தி சிலை அருகே கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதைக் காணலாம். உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி அதிக அளவில் வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நகரமாக புதுச்சேரி உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள கடற்கரைகளில் தடையை மீறி குளித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு சுற்றுலாத்துறை பரிந்துரை செய்துள்ளது. அண்மை காலமாக கடலில் மூழ்கி உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் சுற்றுலாத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு கடற்கரைகளில் மூழ்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டு அன்று 4 மாணவர்கள், அடுத்தடுத்து 2 பேர் என கடந்த 20 நாட்களில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்