< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராகுல்காந்தியின் கோரிக்கையை ஏற்று காயமடைந்த குட்டி யானைக்கு உரிய சிகிச்சை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்
|7 Oct 2022 12:15 AM IST
ராகுல்காந்தியின் கோரிக்கையை ஏற்று காயமடைந்த குட்டி யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு நேற்று முன்தினம் ராகுல்காந்தி ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் நாகரஒலே வனப்பகுதியில் ஒரு குட்டியானை பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடுவதாகவும், அந்த குட்டி யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் மைசூருவில் தசரா ஊர்வல நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் நேற்று பெங்களூரு திரும்பிய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
குட்டி யானைக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக ராகுல்காந்தி எழுதிய கடிதம் மீது மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுப்பேன். வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு காயம் அடைந்த குட்டி யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.