< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்திய அரசு உதவி பிரிவு அதிகாரிகள் 1,592 பேருக்கு பதவி உயர்வு - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
|28 Jun 2023 5:39 AM IST
பிற பிரிவு அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிகள் நடந்துகொண்டிருப்பதாக ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
புதுடெல்லி,
மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உதவி பிரிவு அதிகாரிகள் ஆயிரத்து 592 பேருக்கு பிரிவு அதிகாரிகளாக மொத்தமாக பதவி உயர்வு வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய பணியாளர் நலத்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும், 2 ஆயிரம் உதவி பிரிவு அதிகாரிகளுக்கும், பிற பிரிவு அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அனேகமாக இந்த ஆண்டு இறுதியில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படும் என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.