< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் முதன்முதலில் சூரிய ஆற்றலில் இயங்கும் காரை பயன்படுத்திய பேராசிரியர்
தேசிய செய்திகள்

காஷ்மீரில் முதன்முதலில் சூரிய ஆற்றலில் இயங்கும் காரை பயன்படுத்திய பேராசிரியர்

தினத்தந்தி
|
23 Jun 2022 10:25 AM GMT

காஷ்மீரில் முதன்முதலில் சூரிய ஆற்றலில் இயங்க கூடிய காரை பொறியியலாளர் மற்றும் பேராசிரியரான பிலால் அகமது பயன்படுத்தி உள்ளார்.



ஜம்மு,



நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படும் நிலையில், மாற்று எரிபொருளை உபயோகப்படுத்தும் முயற்சியில் அரசும் ஈடுபட்டு வருகிறது. டெல்லியில் சி.என்.ஜி. எனப்படும் இயற்கை எரிவாயுவை வாகனங்களுக்கு பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுதவிர, மின்சார வாகனங்களும் உபயோகத்தில் உள்ளன. இவற்றுக்கு ஆகும் செலவும் கவனத்தில் கொள்ள வேண்டியவை. இந்த நிலையில், சூரிய ஆற்றலில் இயங்க கூடிய கார் ஒன்றை காஷ்மீரை சேர்ந்த பிலால் அகமது என்ற பொறியியலாளர் முதன்முதலாக பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

இதுபற்றி அகமது செய்தியாளர்களிடம் கூறும்போது, நான் மாற்றுத்திறனாளிகளுக்கான காரை உருவாக்க விரும்பினேன். ஆனால், நிதி நெருக்கடியால் அதற்கு வழி இல்லாமல் போனது. சோலார் காரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஆவலை தூண்டியது.

அது இலவச ஆற்றல் தரக்கூடியது. அதுபோக, அடுத்த 10 ஆண்டுகளில் பெட்ரோல் விலை அதிகளவில் உயர கூடும் என சமீபத்தில் பத்திரிகையில் வந்த செய்தி ஒன்றை படித்தேன் என அவர் கூறியுள்ளார்.



மேலும் செய்திகள்