< Back
தேசிய செய்திகள்
நாயை பைக்கில் கட்டி கொடூரமாக இழுத்துச் சென்ற நபர் - வீடியோ வைரலானதையடுத்து விசாரணைக்கு உத்தரவு
தேசிய செய்திகள்

நாயை பைக்கில் கட்டி கொடூரமாக இழுத்துச் சென்ற நபர் - வீடியோ வைரலானதையடுத்து விசாரணைக்கு உத்தரவு

தினத்தந்தி
|
18 Jan 2023 6:25 PM IST

பீகாரில் நாயை பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரமான வீடியோ வைரலானதையடுத்து இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கயா,

பீகார் மாநிலம் கயாவில் நாய் ஒன்றை சங்கிலியால் பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக எஸ்எஸ்பி ஆஷிஷ் பார்தி தெரிவித்தார்.

அந்த வீடியோவில், பைக்கில் சங்கிலியால் கட்டப்பட்ட நாய் ஒன்றை சாலையில் இழுத்துச் சென்றவாறு ஒருவர் பைக்கில் செல்கிறார். அவரை மக்கள் தடுத்து நிறுத்தியபோது, நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றதாக கூறினார். சிறிது நேரத்தில் நாய் நடக்க மறுத்ததால், அதை இழுத்தவாறு பைக்கை ஓட்டிச் சென்றார்.

அந்த நபர் எந்த வருத்தமும் காட்டவில்லை. தான் பைக்கை மிகவும் மெதுவாக ஓட்டிச் சென்றதாகவும், நாயை சில நூறு மீட்டர்கள் மட்டுமே இழுத்துச் சென்றதாகவும் நியாயப்படுத்தினார்.

மேலும் செய்திகள்