< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பிரியங்கா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு: ஆஸ்பத்திரியில் அனுமதி
|16 Feb 2024 5:08 PM IST
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி உடல் நலம் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரையில், பங்கேற்க பிரியங்கா காந்தி திட்டமிட்டு இருந்த நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் பிரியங்கா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தகவலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருக்கும் பிரியங்கா காந்தி, உடல் நலம் தேறியதும் யாத்திரையில் பங்கேற்க உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் யாத்திரையில் பங்கேற்றுள்ள தனது சகோதரர் மற்றும் கட்சியினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் 'எக்ஸ்'பதிவில் கூறியுள்ளார்.