மத்தியபிரதேசம்: 'பாரத் ஜோடோ நடைபயணத்தில் பிரியங்கா காந்தி நாளை பங்கேற்கிறார்...!
|மத்தியபிரதேசத்தில் நடைபெறும் 'பாரத் ஜோடோ நடைபயணத்தில் பிரியங்கா காந்தி நாளை பங்கேற்கிறார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது ராகுல்காந்தி மத்தியபிரதேச மாநிலத்தில் பாதயாத்திரை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், மத்தியபிரதேசத்தில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாதயாத்திரையில் பிரியங்கா காந்தி நாளை (புதன்கிழமை) கலந்து கொள்வார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் நவம்பர் 23-ந் தேதி முதல் 25 வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் பிரியங்கா காந்தி இணைவது இதுவே முதல் முறை ஆகும். இதுவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இந்திய ஒற்றுமை நடைபயணம் பயணித்துள்ளது.