< Back
தேசிய செய்திகள்
பண மோசடி வழக்கு.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி பெயர்
தேசிய செய்திகள்

பண மோசடி வழக்கு.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி பெயர்

தினத்தந்தி
|
28 Dec 2023 5:03 PM IST

குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோரை குற்றவாளி என குறிப்பிடவில்லை.

புதுடெல்லி:

வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபர் சிசி தம்பியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயரை அமலாக்கத்துறை முதல் முறையாக குறிப்பிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான முந்தைய குற்றப்பத்திரிகையில் அவரது கணவர் ராபர்ட் வத்ராவின் பெயரை குறிப்பிட்டிருந்தது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபர் சிசி தம்பி, இங்கிலாந்து வாழ் இந்தியர் சுமித் சதா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இப்போது பிரியங்கா காந்தியின் பெயரையும் சேர்த்துள்ளது. இருந்தபோதிலும் எந்த இடத்திலும் பிரியங்கா காந்தி மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோரை குற்றாளி எனக் குறிப்பிடவில்லை.

அரியானாவில் டெல்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜென்ட் மூலம் நிலத்தை வாங்கியபின், விற்பனை செய்தது தொடர்பான வழக்கு இதுவாகும். அரியானாவில் 2005-06ல் ராபர்ட் வதேரா, ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம் இருந்து 3 மனைகளை வாங்கியது தொடர்பாகவும், பிரியங்கா காந்தியின் நில ஒப்பந்தம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ராபர்ட் வதேரா மற்றும் சிசிதம்பிக்கு இடையே நட்புறவு இருந்ததாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் கூறியிருக்கிறது.

மேலும் செய்திகள்