பெங்களூருவில் பரமேஸ்வருடன், பிரியங்க் கார்கே திடீர் ஆலோசனை
|பெங்களூருவில் போலீஸ் மந்திரி பரமேஸ்வருடன், மந்திரி பிரியங்க் கார்கே திடீரென ஆலோசனை நடத்தினார்.
சதாசிவநகர்:
பெங்களூரு சதாசிவநகரில் உள்ள போலீஸ் மந்திரி பரமேஸ்வர் வீட்டுக்கு நேற்று காலையில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே சென்றார். பின்னர் 2 பேரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு, அங்கிருந்து பிரியங்க் கார்கே புறப்பட்டு சென்று விட்டார். இதுகுறித்து போலீஸ் மந்திரி பரமேஸ்வரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
பிரியங்க் கார்கே மந்திரியாக இருந்து வருகிறார். நான் வேறு துறையில் மந்திரியாக இருக்கிறேன். எங்களுக்குள் நல்ல புரிதல்கள் இருப்பது அவசியம். அதனால் நானும் அவரும் சேர்ந்து சில விவகாரங்கள் குறித்து பேசினோம். எங்கள் துறை பற்றியும், பிற துறைகள் குறித்தும் ஆலோசித்தோம். சித்தராமையா குறித்து எந்த சூழ்நிலையில் ஹரிபிரசாத் பேசினார் என்பது தெரியவில்லை. அவர் இவ்வாறு பேசி இருப்பது பற்றி எனக்கு தெரியாது. மூத்த தலைவர்கள் சிலர் தங்களது தனிப்பட்ட கருத்துகளை தெரிவிப்பார்கள். இந்த விவகாரம் பற்றி வேறு எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. முதல்-மந்திரி சித்தராமையாவே அதுபற்றி விளக்கம் அளிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.