< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மாநிலங்களவையில் அமளி: 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது உரிமை குழு விசாரணை
|21 Feb 2023 4:08 AM IST
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது, உரிமை குழு விசாரணைக்கு அவைத்தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி,
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அடிக்கடி அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இவ்வாறு அவைக்கு இடையூறாக இருந்த 9 காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் 3 ஆம் ஆத்மி உறுப்பினர்கள் என 12 எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்டு உள்ளது.
இந்த எம்.பி.க்கள் மீதான உரிமை மீறல் பிரச்சினையை விசாரிக்குமாறு நாடாளுமன்ற உரிமை மீறல் குழுவுக்கு மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் அறிவுறுத்தி உள்ளார்.
இந்த தகவலை மாநிலங்களவை செயலகம் வெளியிட்டு உள்ளது.