< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீது மானநஷ்ட வழக்கு; சி.டி. ரவி எம்.எல்.ஏ. தொடர்ந்தார்
தேசிய செய்திகள்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீது மானநஷ்ட வழக்கு; சி.டி. ரவி எம்.எல்.ஏ. தொடர்ந்தார்

தினத்தந்தி
|
14 Jan 2023 12:15 AM IST

அவதூறு கருத்து கூறிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீது மானநஷ்ட வழக்கை சி.டி. ரவி எம்.எல்.ஏ. தொடர்ந்தார்.

சிக்கமகளூரு:

மைசூரு மாவட்டம் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளராக இருப்பவர் லட்சுமணன். இவர் நிருபர்கள் பேட்டியின்போது, சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வான சி.டி. ரவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்து இருப்பதாகவும், அவரிடம் கணக்கில் வராத பல கோடி சொத்துக்கள் இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் தன்னை குறித்து அவதூறு கருத்து கூறி பிரசாரம் செய்து வருவதாக லட்சுமணன் மீது, சி.டி.ரவி எம்.எல்.ஏ. குற்றம்சாட்டி உள்ளார். மேலும், அவர் மீது மானநஷ்ட வழக்கு ஒன்றை சிக்கமகளூரு கோர்ட்டில் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்ய வேண்டும் என்றால் அதை மட்டும் செய்ய வேண்டும். மாறாக பா.ஜனதாவினர் மீது பொய் சுமத்த கூடாது. என் மீது மைசூரு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொய் குற்றம்சாட்டி உள்ளார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள். இதுவரை 4 முறை நான் அதிக வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ.வாக பதவியில் அமர்ந்துள்ளேன். மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். என் மீது பொய் குற்றச்சாட்டு வைத்ததற்கு, பலமுறை அவருக்கு கோர்ட்டு மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளாமல், மீண்டும் மீண்டும் என்னை பற்றி பேசுகிறார். எனவே நான் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும். அப்போது அதை அவர் நிரூபிக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்