தனியார் பஸ் மரத்தில் மோதி விபத்து; பயணிகள் படுகாயம்
|சிவமொக்கா அருகே தனியார் பஸ் மரத்தில் மோதிய விபத்தில் பயணிகள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவமொக்கா;
சிவமொக்கா தாலுகா ஆயனூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பஸ் ஒன்று பயணிகளுடன் சமேனஹள்ளி பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றது.
இதில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி பின்னர் கவிழ்ந்தது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. மேலும் பஸ்சில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்டோர் படுகாயம் அடைத்தனர்.
இதைபாா்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பஸ்சில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து குன்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார், பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு வழிவகுத்து கொடுத்தனர்.