< Back
தேசிய செய்திகள்
பிரித்வி ஷா - சப்னா கில் வாக்குவாத விவகாரம்.. மும்பை கோர்ட்டு அனுப்பிய நோட்டீஸ்
தேசிய செய்திகள்

பிரித்வி ஷா - சப்னா கில் வாக்குவாத விவகாரம்.. மும்பை கோர்ட்டு அனுப்பிய நோட்டீஸ்

தினத்தந்தி
|
14 April 2023 4:42 PM IST

மும்பை விடுதி ஒன்றில் சப்னா கில் மற்றும் பிரித்வி ஷா இடையே சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

மும்பை,

சமூக வலைத்தள பிரபலம் சப்னா கில்லுடன் நிகழ்ந்த வாக்குவாதம் தொடர்பான வழக்கில் பிரித்வி ஷாவிற்கு மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மும்பை விடுதி ஒன்றில் சப்னா கில் மற்றும் பிரித்வி ஷா இடையே சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் தாக்கப்பட்டதாக புகார் தந்த நிலையில், இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, சப்னா கில் மனு அளித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், போலீசாருக்கும் பிரித்வி ஷாவிற்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியதுடன் விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தது.


மேலும் செய்திகள்