< Back
தேசிய செய்திகள்
மதிய உணவில் மட்டன் குறைந்ததால் சிறை அதிகாரிகளை தாக்கிய கைதி

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

மதிய உணவில் மட்டன் குறைந்ததால் சிறை அதிகாரிகளை தாக்கிய கைதி

தினத்தந்தி
|
30 May 2023 6:17 AM IST

மதிய உணவில் மட்டன் குறைந்ததால் சிறை அதிகாரிகளை கைதி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் பூஜப்புரையில் உள்ள மத்திய சிறையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கைதிகளுக்கு மதிய உணவுடன் மட்டன் குழம்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் வழக்கம் போல மதிய உணவின்போது கைதிகளுக்கு மட்டன் குழம்பு வழங்கப்பட்டது. அப்போது வயநாட்டைச்சேர்ந்த முகம்மது பைஜாஸ் (வயது 42) என்ற கைதி தனக்கு மட்டன் குழம்பு குறைவாக வழங்கப்பட்டதாக கூறி ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து அறிந்த சிறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.

அப்போது சிறை அதிகாரிகள் மீது பைஜாஸ் திடீரென தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் துணை கண்காணிப்பாளர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் பூஜப்புரை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் பைஜாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்