< Back
தேசிய செய்திகள்
எ.வ.வேலு குறித்த பிரதமரின் பேச்சை நீக்கவேண்டும்: மக்களவை சபாநாயகருக்கு டி.ஆர்.பாலு கடிதம்
தேசிய செய்திகள்

எ.வ.வேலு குறித்த பிரதமரின் பேச்சை நீக்கவேண்டும்: மக்களவை சபாநாயகருக்கு டி.ஆர்.பாலு கடிதம்

தினத்தந்தி
|
11 Aug 2023 1:45 PM IST

மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான பதிலுரையின் போது, நேற்று பிரதமர் மோடி தமிழக அமைச்சரை விமர்சனம் செய்தார். மேலும், தமிழகம் குறித்த பல்வேறு விஷயங்களை மோடி பேசினார்.

இந்த நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு திமுக எம்.பி.டி.ஆர்.பாலு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், எ.வ.வேலு குறித்த பிரதமர் மோடியின் பேச்சை நீக்கக்கோரி அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை பிரித்துப் பேசுவதாக அமைச்சர் எ.வ.வேலு மீதான பிரதமர் மோடி மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோரின் குற்றச்சாட்டிற்கு டி.ஆர்.பாலு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், ஆகஸ்ட் 5-ல் எ.வ.வேலு பேசிய வீடியோவையும் ஓம் பிர்லாவுக்கு டி.ஆர்.பாலு அனுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்