< Back
தேசிய செய்திகள்
நாட்டில் சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார் - விவசாயிகள் நலத்துறை மந்திரி  நரேந்திர சிங் தோமர்
தேசிய செய்திகள்

நாட்டில் சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார் - விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர்

தினத்தந்தி
|
13 Oct 2022 9:58 PM IST

பாரத அன்னையின் புகழை உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கு பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார் என்று மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசினார்.

புனே,

மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் புனேயில் இன்று நடைபெற்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 8-வது பொதுக்கூட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய அவர் பேசுகையில்:-

நாட்டிலுள்ள ஏழைகள் சமத்துவமின்மையிலிருந்து விடுபடாத வரை நாட்டின் வளர்ச்சிப் பயணம் முழுமை அடையாது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கிராமங்களின் மேம்பாடு, ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

உலக அரசியல் அரங்கில் இந்தியாவின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கும், நமது கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கும், பாரத அன்னையின் புகழை உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கீழ் நாட்டில் சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டு வர, திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்