< Back
தேசிய செய்திகள்
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

நாடு திரும்பினார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
15 Feb 2024 10:24 PM IST

ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி கத்தாரிலிருந்து இந்தியா திரும்பினார்.

புதுடெல்லி,

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் பாப்ஸ் அமைப்பின் சார்பில் பிரமாண்ட இந்துகோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்கு கோவிலை திறந்து வைத்தார்.

பின்னர் அங்கிருந்து கத்தார் சென்றார். தோஹாவில் கத்தார் பிரதமர் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.இரு நாடுகள் பயணத்தை முடித்த பின் பிரதமர் மோடி நாடு திரும்பினார். மோடியின் கத்தார் பயணம் சிறப்பாக அமைந்ததாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்