< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்

"காசிக்கு துளசிதாசர் - தமிழகத்திற்கு திருவள்ளுவர்" காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு

தினத்தந்தி
|
19 Nov 2022 2:41 PM IST

காசிக்கு துளசிதாசர் என்றால், தமிழகத்திற்கு திருவள்ளுவர் என காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி கூறினார்.

வாரணாசி,

பனாரஸ் பல்கலைக்கழகத்தில் காசி-தமிழ் சங்கமம் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்றார்.

"வணக்கம் காசி" "வணக்கம் தமிழ்நாடு" என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கினார்.

உத்தரப் பிரதேசத்தில் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

காசி-தமிழ் சங்கமத்திற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள தமிழர்களை வரவேற்கிறேன்.

நாடு பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் சங்கமமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்த சங்கமமே சாட்சி.

காசியும் தமிழ்நாடும் கலாசாரத்தில் சிறந்து விளங்குகிறது. காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் நீண்ட பந்தம் உள்ளது. காசியை போன்று தமிழ்நாடும் பழமை, கலசாரம் கொண்டது.

தமிழ்நாட்டின் பண்பாட்டை காட்டும் கோவில் காசியில் உள்ளது. காசிக்கு துளசிதாசர் என்றால் தமிழகத்திற்கு திருவள்ளூவர். காசியை வளர்த்ததில் தமிழர்களின் பங்கு அதிகமாக உள்ளது. பாரதியார் காசியில் பயின்றார், பல ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளார் -

காசி பட்டு போல, காஞ்சிபுரம் பட்டும் சிறப்பு வாய்ந்தது. தமிழக திருமணங்களில் காசியாத்திரை என்ற வழக்கம் உண்டு. காசியும் தமிழ்நாடும் திருக்கோவில்களுக்கு பெருமை பெற்றவை. சமஸ்கிருதத்தில் காசியும், தமிழ் மொழியில் தமிழ்நாடும் சிறந்து விளங்குகிறது.

பல வேற்றுமைகளைக் கொண்டுள்ள சிறப்பான நாடான இந்தியாவைக் கொண்டாடவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது போன்ற நிகழ்ச்சிகளால் தான் வேர்களை பாதுகாக்க முடியும் என்றார்.

'ஜனனி ஜனனி ஜகம் நீ..' இளையராஜாவின் பாடலில் தாளம் போட்டு பிரதமர் மோடி ரசித்தார்.

Live Updates

  • காசியை வளர்த்ததில் தமிழர்களின் பங்கு அதிகம் - பிரதமர் மோடி பேச்சு
    19 Nov 2022 3:48 PM IST

    காசியை வளர்த்ததில் தமிழர்களின் பங்கு அதிகம் - பிரதமர் மோடி பேச்சு

    வாரணாசி,

    வணக்கம் காசி - வணக்கம் தமிழ்நாடு என தமிழில் கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    நாடு பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் சங்கமமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. காசியும் தமிழ்நாடும் கலாசாரத்தில் சிறந்து விளங்குகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்த சங்கமமே சாட்சி. காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் நீண்ட பந்தம் உள்ளது. காசியை போன்று தமிழ்நாடும் பழமை, கலசாரம் கொண்டது.

    தமிழ்நாட்டின் பண்பாட்டை காட்டும் கோவில் காசியில் உள்ளது. காசிக்கு துளசிதாசர் என்றால் தமிழகத்திற்கு திருவள்ளூவர். காசியை வளர்த்ததில் தமிழர்களின் பங்கு அதிகமாக உள்ளது.

    காசிக்கு துளசிதாசர் என்றால், தமிழகத்திற்கு திருவள்ளுவர். காசியும், தமிழ்நாடும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகிறது. காசி பட்டு போல, காஞ்சிபுரம் பட்டும் சிறப்பு வாய்ந்தது. தமிழக திருமணங்களில் காசியாத்திரை என்ற வழக்கம் உண்டு. காசியும் தமிழ்நாடும் திருக்கோவில்களுக்கு பெருமை பெற்றவை. இது போன்ற நிகழ்ச்சிகளால் தான் வேர்களை பாதுகாக்க முடியும் என்றார்.

  • 19 Nov 2022 3:37 PM IST

    பாரதியாரின் கனவை நிறைவேற்றும் நிகழ்ச்சி தமிழ் சங்கமம் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்

    வாரணாசி,

    இந்த நிகழ்வில் உரையாற்றிய மத்திய இணை மந்திரி எல்.முருகன், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    புனித பூமி ஆன வாரணாசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஒரு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசிக்கும் தமிழகத்துக்கு உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என தெரிவித்துள்ளார்.

  • பிரதமர் மோடியை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன்-   இளையராஜா
    19 Nov 2022 3:00 PM IST

    பிரதமர் மோடியை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன்- இளையராஜா

    வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் இளையராஜா எம்.பி. பேசும் போது கூறியதாவது:

    பிரதமர் மோடியை பார்த்து வியந்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன். பெருமைமிகு இந்த காசி நகரிலே, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன்.

    நதிநீர் இணைப்பு திட்டத்தை அன்றே பாடினார் பாரதியார். தமிழ்மொழி பழமையான, பெருமைமிக்க மொழி; காசியை போலவே தமிழ்நாடும் பழமையான வரலாறு உடையது என்று கூறினார்.


  • 19 Nov 2022 2:58 PM IST

    வாரணாசியில் நடக்கும் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில் இளையராஜா எம்.பியை பிரதமர் மோடி சந்தித்தார்.

  • ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி; வேட்டி சட்டையில் பிரதமர் மோடி
    19 Nov 2022 2:55 PM IST

    ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி; வேட்டி சட்டையில் பிரதமர் மோடி

    வாரணாசி,

    உத்தரபிரதேசத்தின் காசிக்கும் (வாரணாசி), தமிழகத்துக்கும் இடையே நீண்டகால பாரம்பரிய, கலாசார தொடர்பு உள்ளது. இதை புதுப்பிக்கும் நோக்கில் வாரணாசியில் ஒரு மாத காலத்துக்கு காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை, கலாசாரம், ஜவுளி, ரெயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல்-ஒளிபரப்பு உள்ளிட்ட அமைச்சகங்களும், உத்தரபிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம், டிச.19 வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது.

    காசி, தமிழகத்துக்கு இடையேயான பண்டைய கலாச்சாரம், பாரம்பரியத்தை கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது,

    காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    வாரணாசியில் ஒரு மாதம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இரு மாநிலங்களின் கைத்தறி, கைவினைப்பொருள், புத்தக, ஆவணப்படம், சமையல் தொடர்பான பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்