புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்புள்ளது - பிரதமர் மோடி
|ஆசிரியர் தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.
புதுடெல்லி:
ஆசிரியர் தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார். இந்நிகழ்ச்சியின் போது, சர்வபள்ளி் ராதாகிருஷ்ணணுக்கு, பிரதமர் மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி,
ஆசிரியராக இருந்த தற்போதைய இந்திய ஜனதாபதி மூலம் பாராட்டப்படுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் ஒடிசாவில் தொலைதூர இடங்களில் ஆசிரியர் பணியை மேற்கொண்டார் என்று குறிப்பிட்டார்.
மேலும் நாடு இன்று அமிர்தப் பெருவிழாவின் கனவுகளை நிறைவேற்ற தொடங்கியுள்ள நிலையில், கல்வித்துறையில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆற்றிய பணிகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக கூறினார். தேசிய விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியரின் பங்கு என்பது மனிதர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் கற்பிப்பதாகும். பள்ளி, சமூகம் மற்றும் வீடுகளில் மாணவர்கள் மோதலை கடைப்பிடிக்கக் கூடாது.
புதிய கல்விக் கொள்கை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இக்கொள்கையை உருவாக்கியதில் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு முக்கிய பொறுப்புள்ளது.
2047-ஆம் ஆண்டுக்கான கனவை காணாமல் நாட்டில் உள்ள எந்தவொரு மாணவரும் இருந்துவிடக் கூடாது. தண்டி யாத்திரை – வெள்ளையனே வெள்ளையேறு இயக்கம் நடைபெற்ற காலத்தில் நாட்டில் இருந்த உத்வேகத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.
இந்தியாவின் திறன் பன்மடங்கு வளர, எதிர்கால இந்தியாவிற்காக இதே போன்ற உணர்வை ஒருங்கிணைக்குமாறு ஆசிரியர்களை வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.