< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.!
|18 Sept 2023 9:58 AM IST
மாநிலங்களவையில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் விவாதத்தை தொடங்கி வைக்கிறார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. முதல்நாளான இன்று 75 ஆண்டுகால பாராளுமன்றத்தின் சாதனைகள், நினைவுகள் போன்ற முக்கியம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசுகிறார். நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் மற்றும் தேசத்தின் சாதனைகள் குறித்து பிரதமர் மோடி மக்களவையில் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, மாநிலங்களவையில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் விவாதத்தை தொடங்கி வைக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.