< Back
தேசிய செய்திகள்
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடல்
தேசிய செய்திகள்

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடல்

தினத்தந்தி
|
15 Feb 2023 5:01 PM GMT

ஸ்பெயின் பிரதமருடன் இன்று பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடினார்.

புதுடெல்லி,

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார். இந்த உரையாடலின் போது இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த ஆண்டு ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இதற்கு ஸ்பெயின் அரசு தனது முழு ஒத்துழைப்பை இந்தியாவிற்கு வழங்கும் என பெட்ரோ சான்செஸ் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பெட்ரோ சான்செஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும், ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஸ்பெயின் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்