< Back
தேசிய செய்திகள்
ரூ.3 லட்சம் கோடி லாபம் ஈட்டிய வங்கித்துறை - பிரதமர் மோடி பாராட்டு
தேசிய செய்திகள்

ரூ.3 லட்சம் கோடி லாபம் ஈட்டிய வங்கித்துறை - பிரதமர் மோடி பாராட்டு

தினத்தந்தி
|
20 May 2024 12:41 PM GMT

ரூ.3 லட்சம் கோடி லாபம் ஈட்டிய வங்கித்துறைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் முதன்முறையாக 2023-24ம் நிதியாண்டில் வங்கிகளின் லாபம் 39 சதவிகித வளர்ச்சியுடன் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"கடந்த 10 ஆண்டுகளில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, இந்தியாவின் வங்கித்துறை நிகர லாபம் முதன்முறையாக ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த சமயத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தொலைபேசி-வங்கிக் கொள்கையால் நமது வங்கிகள் நஷ்டத்தில் தத்தளித்தன. ஏழைகளுக்கு வங்கிகளின் கதவுகள் மூடப்பட்டன.

ஆனால் தற்போது வங்கிகளின் இந்த ஆரோக்கியமான வளர்ச்சியானது நமது நாட்டில் உள்ள ஏழைகள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் கடன் கிடைக்க வழிவகுக்கும்."

இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்