< Back
தேசிய செய்திகள்
பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி

தினத்தந்தி
|
31 Aug 2023 7:46 PM IST

பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த 'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்திய 'இளம் புயல்' தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 2வது இடம் பெற்றார். இறுதிப்போட்டியில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் மோதிய பிரக்ஞானந்தா வெற்றிக்காக கடுமையாக போராடினார். இறுதியில் கார்ல்செனின் கைகள் ஓங்கியதால், பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பெற்றார்.

இந்த நிலையில் 2வது இடம் பெற்ற பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோரை தனது இல்லத்துக்கே அழைத்து பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இது குறித்து பிரக்ஞானந்தா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையான தருணம். என்னையும் என் பெற்றோரையும் ஊக்கப்படுத்திய உங்கள் அனைத்து வார்த்தைகளுக்கும் நன்றி. என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்