< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மூன்று நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி
|21 Sept 2024 5:00 AM IST
‛குவாட்' மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா செல்கிறார்.
புதுடெல்லி,
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ( 21ம் தேதி ) அமெரிக்கா செல்கிறார். இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.
அடுத்த நாள், நியூயார்க் நகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். செப்.,23ம் தேதி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்த பயணத்தின் போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.