< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
செகந்திராபாத் - திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
|8 April 2023 12:35 PM IST
செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
செகந்திராபாத்,
தெலங்கானாவில் ரூ.11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். ஐதராபாத் வந்தடைந்த பிரதமர் மோடியை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனை தொடர்ந்து செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து ரெயிலில் பயணித்த பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தெலங்கானாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழாவை, அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் புறக்கணிப்பனிதாக தகவல் வெளியாகியுள்ளது.