< Back
தேசிய செய்திகள்
சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில்  கொடியேற்றினார் பிரதமர் மோடி

Image Courtesy : ANI

தேசிய செய்திகள்

சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் கொடியேற்றினார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
15 Aug 2023 6:22 AM IST

செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

புதுடெல்லி,

இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 1,000 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெல்லி செங்கோட்டை பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினர்கள் 1,800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியைக் காண சுமார் 30 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தர உள்ளனர். தேசிய பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் டெல்லி காவல் துறையினர் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்