< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அவதார திருநாளில் அய்யா வைகுண்டருக்கு பிரதமர் மோடி புகழாரம்
|13 March 2023 6:12 AM IST
அய்யா வைகுண்டர் அவதார திருநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் செலுத்தி டுவிட்டரில் ஒரு பதிவினை நேற்று வெளியிட்டார்.
புதுடெல்லி,
சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார திருநாளையொட்டி பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் செலுத்தி டுவிட்டரில் ஒரு பதிவினை நேற்று வெளியிட்டார்.
அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-
அய்யா வைகுண்டர் சுவாமிகளுக்கு அவரது அவதார திருநாளில் புகழஞ்சலி. அவர் பிறருக்கு தொண்டுகள் செய்வதற்காகவும், அனைவரையும் உள்ளடக்கிய, நீதியான ஒரு சமூகத்தை வளர்த்தெடுக்கவும் சமூகத்துக்கு தன்னையே அர்ப்பணித்தவர் ஆவார்.
நலிவுற்றோருக்கு அதிகாரம் வழங்குவதற்கு அவர் எண்ணற்ற முயற்சிகளை எடுத்துள்ளார். அவரது சிந்தனைகள், தலைமுறைகள் தோறும் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.