< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் வாழ்த்து
|23 Oct 2023 2:04 PM IST
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாரா ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் உயரம் தாண்டுதல் T63 பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது;
"ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்திற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துக்கள். ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T63 போட்டியில் வெள்ளிப் பதக்கம், அவரது அசாத்தியமான திறமைக்கும் உறுதிக்கும் ஒரு சான்றாகும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்." இவ்வாறு அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.