< Back
தேசிய செய்திகள்
ஆங்கிலம் பேசுவதில் பெருமை கொள்வது இந்தியாவின் சோகம்:  கெஜ்ரிவாலை சாடிய கிரண் ரிஜிஜூ
தேசிய செய்திகள்

ஆங்கிலம் பேசுவதில் பெருமை கொள்வது இந்தியாவின் சோகம்: கெஜ்ரிவாலை சாடிய கிரண் ரிஜிஜூ

தினத்தந்தி
|
20 Aug 2022 9:34 PM IST

ஆங்கிலத்தில் பேசுவதில் மக்கள் பெருமை கொள்வது இந்தியாவின் சோகம் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ, கெஜ்ரிவாலை சாடியுள்ளார்.



புதுடெல்லி,



டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லியில், 2.5 கோடி ஏழை மாணவர்கள் பயன் பெறும் வகையிலான இலவச கல்வி திட்டம் மற்றும் ஏழைகளுக்கு இலவச மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளை வழங்குவது ஆகியவற்றை கெஜ்ரிவால் நடைமுறைப்படுத்தி உள்ளார்.

இதனை பிற மாநில முதல்-மந்திரிகளும் எடுத்துக்காட்டாக கொண்டு பின்பற்றவும் வலியுறுத்தி வருகிறார். இவரது டெல்லி பள்ளி மாதிரியை போற்றும் வகையில், நியூயார்க் டைம்ஸ் ஆங்கில நாளேட்டில் கட்டுரை ஒன்று வெளியானது. கெஜ்ரிவாலின் நிர்வாகம் கல்வியில் சாதித்தவற்றை புகழ்ந்து முகப்பு பக்கத்தில் கட்டுரையை அந்த ஏடு பிரசுரித்து இருந்தது.

இதுபற்றி மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ டுவிட்டரில் இந்தியில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆங்கிலத்தில் பேசுவது பெரிய பெருமை என மக்கள் பலர் எடுத்து கொள்வது இந்தியாவின் சோகம். ஒரு படம் ஆஸ்கார் பரிந்துரைக்கு செல்லும்போது அல்லது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒருவரது செய்தி வந்து விட்டால், இந்த மக்கள் அதனை கொண்டாடுகின்றனர்.

இந்த மனநிலையில் உள்ள மக்கள் வெளிநாட்டுக்கே முக்கியத்துவம் அளித்து அதனை பாராட்டவும் மற்றும் நம்பவும் செய்கின்றனர் என ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை சாடி பேசியுள்ளார்.

எனினும், இதன் தொடர்ச்சியாகவே, டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியாவின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தி உள்ளது என்று கெஜ்ரிவால் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்