< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி முர்மு
|9 Oct 2024 9:10 PM IST
அரசுமுறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
டெல்லி,
அரசுமுறை பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி, வரும் 13ம் தேதி முதல் 19ம் தேதி வரை 7 நாட்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அல்ஜீரியா, மவுரித்தேனியா, மலாவி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அந்தந்த நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.