< Back
தேசிய செய்திகள்
வாஜ்பாய் நினைவு தினம்: ஜனாதிபதி, பிரதமர் மரியாதை
தேசிய செய்திகள்

வாஜ்பாய் நினைவு தினம்: ஜனாதிபதி, பிரதமர் மரியாதை

தினத்தந்தி
|
16 Aug 2024 11:16 AM IST

வாஜ்பாய் நினைவு தினத்தையொட்டி ஜனாதிபதி, பிரதமர் மரியாதை செலுத்தினர்.

டெல்லி,

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய். பாஜக மூத்த தலைவரான இவர் 2 முறை நாட்டின் பிரதமராக செயல்பட்டுள்ளார். 1996 மே 16 முதல் 1996 ஜூன் 1ம் தேதி வரை பிரதமராக இருந்த வாஜ்பாய், பின்னர் 1998 மார்ச் 19 முதல் 2004 மே 22ம் தேதி வரை பிரதராக பணியாற்றியுள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வாஜ்பாய் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், அடல் பிஹாரி வாஜ்பாயின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் உள்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்