< Back
தேசிய செய்திகள்
பணியிடத்தில் அழுத்தம்...? அலுவலகத்தில் மயங்கி விழுந்து பெண் பணியாளர் மர்ம மரணம்
தேசிய செய்திகள்

பணியிடத்தில் அழுத்தம்...? அலுவலகத்தில் மயங்கி விழுந்து பெண் பணியாளர் மர்ம மரணம்

தினத்தந்தி
|
25 Sept 2024 10:08 PM IST

உத்தர பிரதேசத்தில் பணியின்போது, பாத்திமா என்ற பெண் நாற்காலியில் இருந்து மயங்கி விழுந்து மரணம் அடைந்து உள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் விபூதிகாந்த் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சதப் பாத்திமா (வயது 45) என்பவர் துணை தலைவர் என்ற அளவிலான பதவியை வகித்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், வேலையில் இருக்கும்போதே அவர், நாற்காலியில் இருந்து மயங்கி விழுந்து மரணம் அடைந்து உள்ளார். சதப்பின் சக பணியாளர்கள் கூறும்போது, அவர் பணியழுத்த சூழலில் இருந்துள்ளார் என கூறினர். அவருடைய மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என உதவி காவல் ஆணையாளர் ராதாராமன் சிங் கூறியுள்ளார்.

புனே நகரில் உள்ள எர்ன்ஸ்ட் மற்றும் யங் என்ற நிறுவனத்தில் பணியாற்றிய அன்னா செபாஸ்டியன் என்ற இளம்பெண் கடந்த ஜூலையில் இளம் வயதில் உயிரிழந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது. அவருடைய தாயார் அனிதா அகஸ்டின், நிறுவனத்தின் தலைவரான ராஜீவ் மேமனிக்கு எழுதிய கடிதத்தில், நிறுவனத்தில் காணப்பட்ட பணிச்சுமையை பற்றி சுட்டிக்காட்டினார்.

அதிக பணி நெருக்கடி பற்றி மூத்த அதிகாரிகளிடம் அன்னா கூறினார் என அவருடைய தந்தை வேதனை வெளியிட்டார். வேலையில், அதிக நேரம் பணியாற்றியது, அதிக பணிச்சுமை ஆகியவை அன்னாவின் மரணத்திற்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டு கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்