< Back
தேசிய செய்திகள்
பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஜனாதிபதி உரை - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஜனாதிபதி உரை - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்

தினத்தந்தி
|
22 Jan 2023 5:17 AM IST

பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஜனாதிபதி உரை நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமானப்பணிகள் முடிந்து தயாராகி விட்டது.

வருகிற 31-ந்தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த புதிய கட்டிடத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இதில் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இந்த ஜனாதிபதி உரை பழைய கட்டிடத்தில்தான் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'பட்ஜெட் கூட்டத்தொடரில் மாண்புமிகு ஜனாதிபதி, தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு அவைகளின் உறுப்பினர்களுக்கு மத்தியில் உரையாற்றுவார்' என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் செய்திகள்