< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
செவிலியர்களுக்கு தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!
|7 Nov 2022 9:29 PM IST
செவிலியர் பணிகளில் ஈடுபடுவோர் ஆற்றிய சிறந்த சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கப்படுகிறது.
புதுடெல்லி,
செவிலியர்கள் மற்றும் செவிலியர் பணிகளில் ஈடுபடுவோர் சமூகத்திற்கு ஆற்றிய சிறந்த சேவைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் 1973-ம் ஆண்டு தேசிய புளோரன்ஸ் நைட்டிங் கேல் விருதுகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான தேசிய புளோரன்ஸ் நைட்டிங் கேல் (கைவிளக்கு ஏந்திய காரிகை) விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.தமிழ்நாட்டை சேர்ந்த இ.மங்கம்மாள் மற்றும் எஸ்.செல்வி ஆகிய இருவருக்கு விருது கிடைத்துள்ளது.