< Back
தேசிய செய்திகள்
5 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஐதராபாத் வருகிறார்
தேசிய செய்திகள்

5 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஐதராபாத் வருகிறார்

தினத்தந்தி
|
26 Dec 2022 1:54 AM IST

5 நாள் தெலுங்கானா பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஐதராபாத் வருகிறார்.

இன்று வருகிறார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு, தெலுங்கானா மாநிலத்தில் 5 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக இன்று (திங்கட்கிழமை) தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் வருகிறார்.

இந்த பயணத்தின்போது, ராமப்பா மற்றும் பத்ராசலம் கோவில்களுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்கிறார். ஐதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சில உள்ளூர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

ரங்காரெட்டி மாவட்டத்தில், பதேபூர் ஸ்ரீராமச்சந்திரஜி மகாராஜின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஒரு கல்வெட்டை திறந்து வைக்கிறார்.

பன்னடுக்கு பாதுகாப்பு

இந்த தகவல்களை மாநில தலைமை செயலாளர் சோமேஷ் குமார் தெரிவித்தார். ஜனாதிபதி வருகைக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஒவ்வொரு அமைப்பும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி வருகையையொட்டி, பன்னடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து வேறு பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்