< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புதிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக உரையாற்றுகிறார் திரவுபதி முர்மு
|31 Jan 2024 10:35 AM IST
முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கவுள்ளது. தற்போதைய 17-வது மக்களவையின் கடைசி நாடாளுமன்றக் கூட்டம் இதுவாகும்.
அதேநேரம், நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றவுள்ளார்.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அலுவல்கள் தொடங்கப்பட்ட நிலையில், முதல்முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றவுள்ளார். அவரது உரையில், கடந்த 10 ஆண்டு கால பாஜக அரசின் சாதனைகள் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நாளை காலை 11 மணிக்கு மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனும் புதிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.