< Back
தேசிய செய்திகள்
அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்

தினத்தந்தி
|
1 May 2024 3:18 PM GMT

அயோத்தி ராமர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், திரைப்பிரபலங்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ராமர் கோவில் பிரதிஷ்டை நிறைவடைந்ததையடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் ராமர் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல், சுற்றுலா பயணிகளும், உள்ளூர், வெளியூர் மக்களும் ராமர் கோவிலை பார்வையிட அயோத்தி வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உத்தரபிரதேசம் சென்றுள்ளார். அவர் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ராமர் கோவில் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்வு கடவுள் ராமருக்கு தீபாரதனை செய்து வழிபாடு செய்தார்.

மேலும் செய்திகள்