< Back
தேசிய செய்திகள்
2 நாள் பயணமாக கேரளா வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!
தேசிய செய்திகள்

2 நாள் பயணமாக கேரளா வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!

தினத்தந்தி
|
16 March 2023 11:26 AM GMT

பதவியேற்ற பின் முதன்முறையாக 2 நாள் பயணமாக கேரளா கேரளா வந்தடைந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு...!

திருவனந்தபுரம்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு தென்மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தமிழ்நாட்டிற்கு கடந்த மாதம் 18-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கோவையில் உள்ள ஈசா மையத்திற்கு சென்றார். இந்த நிலையில்

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சி வந்தடைந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் கருடாவிற்கு புறப்பட்டனர். அவர் ஐஎன்ஸ் விக்ராந்தை பார்வையிட உள்ளார்.

இன்று இரவு கொச்சியில் தங்கும் அவர் நாளை (17-ந்தேதி) காலை மாதா அமிர்தானந்தாமயி தேவி மடத்திற்கு செல்கிறார். பின்னர் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

தொடர்ந்து கேரளாவின் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தால் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்ட டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் தொழில்நுட்ப புத்தகங்களையும் வெளியிடுகிறார். கேரளா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் அவர் நாளை மறுநாள் (18-ந்தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு தனி படகில் செல்கிறார். தொடர்ந்து விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்கு ராமாயண சித்திர தரிசன கூடத்தை பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு அவர் மீண்டும் கேரளா செல்கிறார்.

கேரளா சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு லட்சத்தீவுக்கு செல்கிறார். அங்கு கவரட்டி தீவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் அங்கு மகளிர் சுய உதவி குழுவினரை சந்தித்து கலந்துரையாடுகிறார். கேரளாவுக்கு இன்று வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்