< Back
தேசிய செய்திகள்
கணவனுக்கு தெரியாமல் கர்ப்பம்... குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பெண்..! - கேரளாவில் பரபரப்பு
தேசிய செய்திகள்

கணவனுக்கு தெரியாமல் கர்ப்பம்... குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பெண்..! - கேரளாவில் பரபரப்பு

தினத்தந்தி
|
17 Aug 2022 7:56 PM IST

கேரள மாநிலம் இடுக்கியில் பச்சிளங் குழந்தையை வாளி தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.



இடுக்கி,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா கரிமண்ணூரைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண்ணுக்கு கடந்த 10ம் தேதி இரவு குழந்தை பிறந்துள்ளது. பிறந்த உடனே குழந்தையை வாளி நீரில் மூழ்கி கொலை செய்துள்ளார். அதனை தொடர்ந்து சுஜாதா அதீத ரத்தப் போக்கின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் சுஜாதாவிடம் மருத்துவர்கள் விசாரித்த போது, குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் நடத்தினர்.

விசாரணையில், சுஜாதா தான் கர்ப்பமாக இருப்பது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாது என்பதால் குழந்தையைக் கொலை செய்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, சுஜாதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்