< Back
தேசிய செய்திகள்
சிக்கமகளூருவில் முன்எச்சரிக்கை நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா பேட்டி
தேசிய செய்திகள்

சிக்கமகளூருவில் முன்எச்சரிக்கை நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா பேட்டி

தினத்தந்தி
|
30 July 2022 8:28 PM IST

சிக்கமகளூருவில் முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா பேட்டி அளித்தார்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் நடந்துள்ள தொடர் கொலைகளை அடுத்து சிக்கமகளூரு மாவட்டத்தில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தட்சிண கன்னடா மாவட்ட எல்லைப் பகுதியில் இருந்து சிக்கமகளூரு மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களிலும், பஸ்களிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

மேலும் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தங்குபவர்களின் ஆதார் அடையாள அட்டை, வாகன எண் அனைத்தையும் சரிவர பெற்றுக் கொண்டு அவர்களை தங்க அனுமதிக்க வேண்டும்.

மேலும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது சுற்றித்திரிந்தால் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்