< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் செலுத்திய முன்னெச்சரிக்கை டோஸ் விகிதம் 24%:  முதல்-மந்திரி கெஜ்ரிவால்
தேசிய செய்திகள்

டெல்லியில் செலுத்திய முன்னெச்சரிக்கை டோஸ் விகிதம் 24%: முதல்-மந்திரி கெஜ்ரிவால்

தினத்தந்தி
|
22 Dec 2022 7:26 PM IST

டெல்லியில் 24% பேரே முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தியுள்ளனர் என்றும் பிஎப்.7 வகை கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.



புதுடெல்லி,


டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, சீனா மற்றும் பிற பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அது பிஎப்.7 வகையை சேர்ந்தது.

அந்த வகை பாதிப்பு டெல்லியில் ஒருவருக்கு கூட இல்லை. அதனால் கவலைப்பட தேவையில்லை. நாங்கள் மரபணு பரிசோதனையும் செய்து வருகிறோம். டெல்லியில் தற்போது எக்ஸ்பிபி வகை கொரோனாவே காணப்படுகிறது.

டெல்லியில் கொரோனா சிகிச்சைக்காக 8 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. 36 ஆயிரம் படுக்கைகளை தயாரிக்கும் இலக்கை கொண்டிருக்கிறோம். டெல்லியில் 928 மெட்ரிக் டன் ஆக்சிஜனை சேமிக்கும் திறன் எங்களிடம் உள்ளது என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் 24% பேரே முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தி கொண்டுள்ளனர். மக்கள் முன்னெச்சரிக்கை டோஸ்களை எடுத்து கொள்ள வேண்டும் என வேண்டுகோளாக கேட்டு கொள்கிறோம்.

380 ஆம்புலன்சுகள் உள்ளன. கூடுதலாக ஆம்புலன்சுகளை வாங்குவதற்கான ஆர்டர்களை கொடுத்திருக்கிறோம். மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்காக காத்திருக்கிறோம். உத்தரவு வந்தவுடன் அவற்றை அமல்படுத்துவோம் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்