< Back
தேசிய செய்திகள்
குழந்தை பெற்ற பின்னரும் கவர்ச்சியில் கலக்கும் நடிகை பிரணிதா
தேசிய செய்திகள்

குழந்தை பெற்ற பின்னரும் கவர்ச்சியில் கலக்கும் நடிகை பிரணிதா

தினத்தந்தி
|
17 Sept 2022 12:15 AM IST

நடிகை பிரணிதா குழந்தை பெற்ற பின்னரும் கவர்ச்சியில் கலக்கி வருகிறார்.

பெங்களூரு:


கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் பிரணிதா. இவர் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் கொரோனா காலத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி திடீரென நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். மகளுடன் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை பிரணிதா மீண்டும் தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றினார். தற்போது வசீகர அழகுடன் காட்சி அளிக்கும் பிரணிதா மீண்டும் கவர்ச்சியாக போட்டோ சூட் மற்றும் வீடியோ சூட் நடத்தி உள்ளார். அவற்றை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளார். அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்