< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கலக உற்சவம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
|8 Jan 2023 2:46 PM IST
வைகுண்ட ஏகாதசிக்கு 6-வது நாள் பிரணய கலக உற்சவம் நடத்தப்படுகிறது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கலக உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வைகுண்ட ஏகாதசிக்கு 6-வது நாள் பிரணய கலக உற்சவம் நடத்தப்படுகிறது.
ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் 3 முறை மலர்களால் செய்யப்பட்ட பந்துகளை வீசும்போது அதில் இருந்து தப்பிக்க மலையப்பசுவாமி பின்னால் செல்லும் சம்பிரதாய உற்சவம் நடைபெற்றது. தாயார்களை சமாதானம் செய்த பிறகு மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்து கோவிலுக்கு வந்தடைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.