< Back
தேசிய செய்திகள்
மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு பா.ஜனதா மகளிர் அணியினர் பாராட்டு
தேசிய செய்திகள்

மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு பா.ஜனதா மகளிர் அணியினர் பாராட்டு

தினத்தந்தி
|
24 Sept 2023 12:15 AM IST

உப்பள்ளியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு பா.ஜனதா மகளிர் அணியினர் பாராட்டு தெரிவித்தனர்.

உப்பள்ளி:

உப்பள்ளியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷிக்கு பா.ஜனதா மகளிர் அணியினர் பாராட்டு தெரிவித்தனர்.

பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை பா.ஜனதா அரசு கொண்டு வந்து உள்ளது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி இருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். எதிர்க்கட்சியினரும் வரவேற்று வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி புதுடெல்லியில் இருந்து நேற்று உப்பள்ளிக்கு திரும்பினார். அவர் புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் உப்பள்ளிக்கு வந்தார். அதையடுத்து அவர் பா.ஜனதா கட்சி அலுவலகத்துக்கு சென்றார்.

அங்கு அவரை தார்வார் மாவட்ட பா.ஜனதா மகளிர் அணியினர் சந்தித்தனர். பின்னர் அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உற்சாக வரவேற்பு

முன்னதாக அவரை பா.ஜனதா பிரமுகர்கள் உப்பள்ளி விமான நிலையத்தில் சந்தித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர். அங்கிருந்து பிரகலாத் ஜோஷி காரில் உப்பள்ளி தேஷ்பாண்டே நகரில் உள்ள பா.ஜனதா கட்சியின் அலுவலகத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்